இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 366 பேர் இன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதன்படி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41420ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


















