ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் ஒரு சாதனையை முறியடித்தார் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இதன்படி அதிக இடக்கை துடுப்பாட்டவீரர்களை ஆட்டமிழக்கச் செய்த முரளிதரனின் சாதனையையே அஸ்வின் முறியடித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் துடுப்பாட்டக்காரர் ஹேசல்வூட்டின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார்.
இதன்படி அஸ்வின் 192 விக்கெட்டுக்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.
இடக்கை துடுப்பாட்டவீரர்களை அதிக தடவை ஆட்டமிழக்கச் செய்த அடுத்த ஐந்து பந்து வீச்சாளர்கள் விபரம் வருமாறு
முரளிதரன்191, (இலங்கை),அண்டர்சன்186 (இங்கிலாந்து), மக்ராத் 172( அவுஸ்ரேலியா), ஷேன்வோர்ன்172 ( அவுஸ்ரேலியா), அனில் கும்ளே167 (இந்தியா)