முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு கொரொனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை , முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை 115 பேரிடம் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் 106 பேருக்கு தொற்றில்லை என்கின்ற முடிவும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் , முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் உடனடியாக செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை என்பதால் பதினோறாம் நாள் செய்கின்ற பரிசோதனைகள் இடம்பெறும் வரை மக்களை மிக அவதானமாக செயற்படுமாறும் தொற்று இல்லை என்று கருதி செயற்படாது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து செயற்படுமாறு காதாரப்பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மீதி ஒன்பது பேருடைய இறுதி முடிவுகள் இன்று கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


















