சித்ராவுக்கு போதை மருந்துகளை உபயோகப்படுத்தும் பழக்கம் இருந்ததும், அவர் இறந்த பின்னர் கைப்பையில் கஞ்சா இருந்ததும் தெரியவந்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்தை பொலிசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி நேற்று சித்ரா தாயார் விஜயா கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் சித்ரா வழக்கில் சில முக்கிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி சித்ராவுக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் இறந்த போது அவரின் கைப்பையில் 150 கிராம் கஞ்சா இருந்ததை பொலிசார் கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர்.
இதோடு கஞ்சா லோட் செய்யப்பட்ட சிகரெட்டும் கைப்பையில் இருந்தது.
இதனிடையில் எந்த பின்னணியும் இல்லாத ஹேமந்த் சித்ராவை எப்படி கவர்ந்தார்? போதை மருந்துகளை சப்ளை செய்வதன் மூலம் அவருடன் நட்பானாரா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சித்ரா இறக்கும் போது அவர் உடலில் போதை மருந்துகள் இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து அவருக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், சித்ரா போதை மருந்துகளை உபயோகப்படுத்தினாரா என்பதை அறிய அவர் உடல் பகுதிகளை நச்சியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம், அதன் முடிவு இன்னும் வரவில்லை.
முடிவு வந்த பின்னரே அது குறித்து தெரியவரும் என கூறியுள்ளனர்.