கொழும்பு மாநகராட்சியின் தீயணைப்பு சேவைத் துறையின் அவசர தொலைபேசி இலக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான அவசர இலக்கம் மீள் திருத்தம் செய்யப்படும் வரை 0112-422222, 0714-466232 அல்லது 0714-274161 என்ற இலக்கங்கள் ஊடாக தீயணைப்பு சேவைகள் துறையை தொடர்பு கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.