ஸ்ரீலங்கா வரலாற்றில் 560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு பிறப்போடு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் விஷேட படையின் படைத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இவ்வாறு விசேட படையின் 24 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 560 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விசேட படையின் படைத் தளபதியின் சிபாரிசின் பேரில் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் நிலை 1 இல் இருவரும் , அதிகாரவாணையற்ற அதிகாரிகள் நிலை 2 இல் 18 பேரும், பதவி நிலை சார்ஜென்ட்கள் 61 பேரும் சார்ஜென்ட்கள் 84 பேரும் கோப்ரல்கள் 325 பேரும் லான்ஸ் கோப்ரல்கள் 70 பேரும் இவ்வாறு ஆளணி முகாமைத்துவ பணிப்பகத்தினால் நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா வரலாற்றில் இவ்வாறு அதிகளவான சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.