பிக்பாஸ் நிகழ்ச்சியானது 88 நாட்களை கடந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பாலா ஆரி இடையே பெரிய வாக்குவாதமே ஏற்பட்டது.
ஆரி சும்மா இருந்தாலும், பாலா வீண் வம்பாக சென்று பிரச்சினை இழுத்து வந்தார். மேலும் ஆரியை தகாத வார்த்தைகளாலும் திட்டி மிரட்டினார்.
இதனிடையே நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய கமல், பாலாவின் தவறை உணர்த்தி எச்சரித்தார். ஆனாலும் பாலா அதையே பேசிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அத்தனை வலிகளையும் அடக்கி வைத்திருந்த ஆரி, கமல் பேசியதும் சற்றே ரிலீவ் ஆகி கார்டன் ஏரியாவில் கர்ஜித்து தனது ஸ்ட்ரெஸ்ஸை போக்கிக் கொண்டார்.



















