தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஸ்தாபகரும் பிரதமரின் நேரடி ஒருங்கிணைப்பாளருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் – நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம்.
இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம்.
இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.
தற்போது எமக்கு நல்ல ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர்களின் அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்வதற்கு என பல திட்டங்களை வைத்துள்ளது.
அவ்வாறான திட்டங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நாங்கள் இப்போது வடக்கிலும் கிழக்கிலும் காலூன்றி பல சேவைகளை செய்து வருகின்றோம் என்றார்.




















