நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்துக்களின்போது 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு, 50 பேர் சிறு காயமடைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், வாகனங்களுக்கு மாத்திரம் சேதம் எற்பட்ட 21 விபத்துகளும் பதிவாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு, 607 பேர் சிறுகாயத்துக்கும் உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



















