இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கர் திடீர் விஜயமாக இலங்கை வருகிறார்.
இந்த வார இறுதிக்குள்- அடுத்த சில நாட்களிற்குள் அவர் இலங்கை விஜயம் செய்வார் என தெரிய வருகிறது.
இலங்கையில் சீனத்தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் அடுத்த சில நாட்களில் இலங்கை வருகிறார்.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார்.