தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட தமிழர்க்ள பலர் இந்த அறிவிப்பை வரவேற்று வரவேற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் "தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும்" உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/WGOaT1IT2T
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 5, 2021
அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமானும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன் முப்பாட்டன் முருகப் பெருந்தகையைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழக அரசுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.@CMOTamilNadu pic.twitter.com/kTt78UPUry
— சீமான் (@SeemanOfficial) January 5, 2021
அதில், நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி என சீமான் தெரிவித்துள்ளார்.