பிரான்சில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள் ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்ஸ் 6வது இடத்தில் உள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை 27,17,059 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 65,549 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம், பிரான்சில் Pfizer-BioNTech உருவாக்கிய தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்சில் கிட்டதட்ட 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்தார்.
பிரான்சில் அதிக அளவு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் இருப்பதால் தற்போது அமுலில் உள்ள கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது சாத்தியமில்லை என்றும் வேரன் கூறினார்.
அதிகரித்து வரும் புதுவகை கொரோனாவால் பிரித்தானியாவில் 3வது முழு ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்தால், நாடு தழுவிய அளவில் மூன்றாவது ஊரடங்கை பிரான்ஸ் நிராகரிக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.