வீதிகளில் நடமாடும் மக்கள் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அவ்வாறான நபர்களுக்கு PCR பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
முகக் கவசம் அணியாதவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் என சுகாதார பிரிவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாத 74 பேர் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் நாடு முழுவதும் இறைச்சி விற்பனை, மரக்கறி விற்பனை, வாராந்த சந்தை, பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள நபர்களை பரவலாக தெரிவு செய்து ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.