தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அரசாங்கத்தினால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனேகமாக, இரண்டொரு தினங்களிற்குள் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நேற்று (5) மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, கைதிகள் விடயம் தொடர்பில் கூட்டமைப்பிடம் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராசாவை சந்தித்து பேசவும், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து ஆராய விரும்புவதாகவும் தினேஷ் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும்போது, அவர்களுடன் பேசி நேரத்தை தீர்மானிக்கும்படியும், கொழும்பில் இன்று தங்கியிருப்பதால் தானும் கலந்து கொள்ள முடியும் என்றும் மாவை தெரிவித்துள்ளார்.


















