தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பிணையாளர்களாக நிற்பதற்கு நாம் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ் வேண்டுகோளை விடுத்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொரோனா தொற்றிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பதற்காக அவர்களை உடனடியாக பிணையில் விடுதலை செய்யவேண்டும்.
அவ்வாறு விடுதலை செய்பவர்களிற்கு பிணையாளர்களாக இருப்பதற்கு நாங்கள் தயார்.
கொரோனா தொற்றிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்கவேண்டியதன் நிமிர்த்தம், “அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நாட்டில் இடம்பெற்றது உரிமை போரே, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளிற்கு கொரோனா ஆபத்து உருவாகியுள்ளது என்றார்.