கொக்கலையில் அமைந்துள்ள லோன்க் பீச் ஹோட்டல் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.
நாளை முதல் அங்கு சிகிச்சை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் அதன் நடவடிக்கைள் இராணுவத்தினரின் கீழ் இடம்பெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் , கொவிட் தொற்றாளர்கள் பணம் செலுத்தி அங்கு சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.