கண்டி – பூவெலிகட பகுதியிலுள்ள ஐந்து மாடி கட்டடமொன்று தாழிறங்கியமை தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நிலத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் குறித்த கட்டடம் உரிய தரத்தில் அமைக்கப்படாமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி கண்டி – பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தையும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக குறித்த கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது குறித்த விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.