யாழ் மாநகரசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டமைப்பு எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்குள் பொதுஜன பெரமுன எம்.பிக்கள் கலாய்த்து வரும் சம்பவம் இடம்பெற்று வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு இந்த அனுபவம் நேர்ந்துள்ளது.
யாழ் முதல்வர் வி.மணிவண்ணனின் பெயரை குறிப்பிட்டு, கூட்டமைப்பு எம்.பிக்களை கலாய்த்து வருகிறார்கள்.
புதிய ஆண்டில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்துள்ளன. இதன்போது, சந்தித்து கொள்ளும் எம்.பிக்கள் புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். இப்படி பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரமுன எம்.பிக்கள் கலாய்த்து வருகிறார்கள்.
“எப்படி மணி… நம்மாள்த்தான் அவர். எப்படி கயிறு கொடுத்தார் உங்களிற்கு?“ என்றும், “யப்னா முனிசிபல் எப்படி?“- இவ்வாறு பலவிதமாக கூட்டமைப்பு எம்.பிக்களை கலாய்த்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களில் 5இற்கும் குறையாத கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு இந்த சம்பவம் நடந்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
இப்படி கூட்டமைப்பு எம்.பிக்களை தனிப்பட்ட ரீதியில் கலாய்த்தவர்களில் ஒருவர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!