கொரோனா தொற்றால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 231 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
கட்டாரிலிருந்து 30 பேரும், சைப்பிரஸிலிருந்து 201 பேரும், கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்றையதினம் 375 பேர் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















