நாட்டில் நேற்று 525 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,305 ஆக அதிகரித்துள்ளது.
524 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்.
கடந்த 24 மணி நேரத்தில் 656 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40,317 ஆக அதிகரித்தது.
தற்போது நாட்டின் 67 மருத்துவமனைகளில் 6,766 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் 671 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.


















