யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாக பிரித்தானியா வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் ஹகமட் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் காட்சிகளால் வருத்தம். இலங்கையின் போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மக்கள் நினைவில் வைத்திருப்பது முக்கியம்
இது கடந்த கால காயங்களை குணப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.” என்றார்.
இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, பிரித்தானியா வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் ஹகமட் குறித்த சம்பவம் தொடர்பில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.


















