2009இல் அழித்த அவர்களை விட 2021இல் சிதைத்த இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தை முன்னிறுத்தியே ரதன தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக மாணவராகிய மேற்படி தேரர் இதுகுறித்து தனது முக நூலில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தபோதும் பின்னர் அவற்றை நீக்கியுள்ளார். குறித்த பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்,
”நாங்கள் மீண்டும் ஆயுதங்களை எடுக்க விரும்பவில்லை. இந்த நாட்டில் அந்த நினைவுகளுடன் நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம். இந்த சிங்கள தேசத்திலிருந்து வேறு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”
தேரரின் மேஎற்படி கூற்றுக்கு சிங்கள இனவாதிகள் பலரிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு உருவானது. மிகவும் கீழ்த்தரமான முறையில் மேற்படி இனவாதிகள் தேரரின் பதிவுக்கு கருத்திட்டனர். இதனைத்தொடர்ந்து குறித்த பதிவை தேரர் நீக்கியதுடன் பொறுமை மிக முக்கியம் என கடைசியாக தமிழில் பதிவு போட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை சார்ந்து குரல்கொடுத்துவரும் குறித்த தேரர் முகநூலில் தனது பெயரை தமிழ் மொழியிலேயே வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.