தமிழ் மக்களின் எண்ணங்களில் உள்ள போராட்ட நினைவுகளை இலகுவில் அகற்றி விட முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது, கடும் கண்டனத்திற்குரியது.
இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 9, 2021

தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும்.
இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.