இந்தோனேஷியாவில் இருந்து 152 பேருடன் புறப்பட்ட விமானம் தற்போது அதன் பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்படுள்ளது.
இந்தோனேஷியா நாட்டில் உள்ள ஜாகர்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீவிஜயா விமானம்(SJ182) மாயமாகியுள்ள நிலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கையில் திடீரென ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது.
இதனையடுத்து, விமானத்தில் 152 பேர் பயணம் செய்யவில்லை என்றும், விமான குழுவினர் மற்றும் பயணிகள் உட்பட 59 பேர் பயணம் செய்ததாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.
இந்த விமானம் புறப்பட்ட 4 நிமிடத்திற்கு உள்ளாகவே, விமான கட்டுப்பாட்டு அறையுடன் கொண்ட தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள கடலில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என தகவல் தெரியவந்த நிலையில், விமானத்தின் பல பாகங்கள் நீரில் மிதந்துகொண்டு இருந்ததும் அப்பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், விமானத்தை தேடும் பணியில் தேசிய மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விமான நிலையங்களில் கண்ணீருடன் குவிந்தவண்ணம் உள்ளனர். மேலும், இந்த விமானம் போயிங் 737-500 ரக விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/VocalPUP/status/1347864944570732545
#BREAKING
Images shared by search and rescue teams show that first parts of debris of the Indonesian Srivijaya Air Boeing 737-500 have been found.▪️Contact with the plane was lost 4 minutes after takeoff.
— EHA News (@eha_news) January 9, 2021