யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி
அழிக்கப்பட்ட விடயம் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குழைக்கும்
முயற்சியே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின்
செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்-
நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின் இனங்களுக்கு இடையேயான நல்லிணக்க
நடவடிக்கைகள் கட்டியெழுப்பட வேண்டும். இனங்களுடைக்கிடையே
புரிந்துணர்வும், நல்லிணக்கமும் கட்டியெழுப்படுகின்ற போதே நாடு
நிரந்தரமான அமைதியினை நோக்கிச் செல்லும். ஆனால் துர்திஸ்டவசமாக அதற்கு
மாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை வருத்தமளிக்கிறது. இது
கண்டனத்திற்குரிய செயல்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தமிழ் மக்களின் உணர்வுகளுடன் சம்மந்தப்பட்ட
விடயம் அது பயங்கரவாதத்துடன் சம்மந்தப்பட்ட விடயமல்ல. எனவே உணர்வுகளுடன்
சம்மந்தப்பட்ட விடயங்களில் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் பொறுப்புடன்
நடந்துகொள்ள வேண்டும். தெற்கில் பொது இடங்களிலும், பல்கலைகழகங்களில் பல
நினைவு தூபிகள், சின்னங்கள் இருக்கின்றன அவ்வாறே யாழ்
பல்கலைகழகத்திலும் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி. இவற்றை இடித்து
அழிப்பது தமிழ் மக்களின் உணர்வுகளை அடித்து அழிப்பதாகும்.
முள்ளிவாக்காலில் பல்கலைகழக மாணவர்கள், பல்கலைகழகத்திற்கு அனுமதிபெற்ற,
மாணவர்கள், ஏனைய மாணவர்கள் என பலர் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்த
விடயம். எனவே காயங்களை ஆற்றுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நினைவு
தூபியை அழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.