யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
465 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது, வவுனியா சுகாதர வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதுதவிர, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று வவுனியா வைத்திசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 16 வயதான சிங்கள மாணவன் ஒருவரும், 26 வயதான ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த யுவதியொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.


















