என்னை மீண்டும் பழைய மாதிரி ஆக்கவேண்டாம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,
”நான் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச. எனக்குள் இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன. மகா சங்கத்தினர் உட்பட மக்கள் நான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உரையாற்றியதை அறிந்திருப்பீர்கள். பித்தளை சந்தியில் பிரபாகரன் எனக்கு குண்டு வைத்தார். அவர் ஒரு நாய் போல் கொல்லப்பட்டார். என்னை யாராவது மீண்டும் பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் எனது பழைய வகிபாகத்தைக் காட்டவும் தயார். நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷ அல்லது கோத்தாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


















