2009ஆம் ஆண்டு தமிழர்களிற்கு இடம் பெற்ற இனப்படுகொலையை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்காக இலங்கை அரசைக் கண்டித்து 1,000க்கு மேற்பட்ட வாகனங்கள் கனேடிய ஈழ உணர்வளர்களால் பேரணியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கனேடிய மக்களின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியானது கனடா நேரம் மதியம் 2:45 மணிக்கு குயின்ஸ்பார்க்கில் நிறைவடைந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதனைக் கண்டித்து கனடாவின் Toronto நகரில் Ontario சட்டசபையினை நோக்கி இந்த வாகன பேரணி இடம்பெற்று வருகிறது.
The Tamil Canadian car rally to condemn the destruction of the #Mullivaikkal memorial has commenced at Brampton City Hall. They will be driving to Toronto City Hall and Queen's Park to protest.
I stand in solidarity with those in #Eelam who demand justice for the #TamilGenocide. pic.twitter.com/s3WFFnkRpI
— Gurpreet Singh Dhillon (@gurpreetdhillon) January 10, 2021


















