பிலிப்பைன்சில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விமான பணிப்பெண் சம்பவத்தில், அப்பெண்ணை நபர் ஒருவர் இறப்பதற்கு முன் இழுத்து பிடித்து முத்தமிடும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்சின் Makati-யில் உள்ள Garden City Grand Hotel-க்கு புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது சக ஊழியர்களுடன் விமானப் பணிப்பெண்ணான Christine Dacera சென்றதாக கூறப்படுகிறது.
கொண்டாட்டத்திற்கு சென்ற அவர், சடலமாக மீட்கப்பட்டார். அங்கிருக்கும் ஹோட்டல் அறை ஒன்றின் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க துவங்கினர். இதில் முதல் கட்ட விசாரணையில் 11 பேரிடம் சந்தேத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் Christine Dacera உயிரிழப்பதற்கு முன், அங்கிருக்கும் ஹோட்டலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேரில் ஒருவர், அவரை பிடித்து இழுத்து முத்துமிட முயலும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.
கடந்த 31-ஆம் திகதி மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் ஹோட்டல் அறையின் கதவை தட்டி Christine Dacera-ஐ முத்தமிட முயல்வதை காண முடிகிறது.
அதைத் தொடர்ந்து இவர்கள் பின்னாடி பல ஆண்கள் பின் தொடர்வதையும் பார்க்க முடிகிறது. Christine Dacera அந்த நபரிடம் இருந்து தன்னை விலக்கி கொள்ள முயல்கிறார், அறையின் கதவை திறக்க முயற்சிக்கிறார்.
ஆனால், அவரை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் வற்புறுத்தி முத்தமிட முயல்கிறார். இது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வழக்கமான கொடுக்கப்படும் அன்பான முத்தம் போன்று இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், முத்தம் கொடுக்க முயலும் அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரின் பெயர் Valentine Rosales என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனால் இது நிச்சயமாய பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில், ஊயிரிழந்து கிடந்த Christine உடலில் கீறல்கள், பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு, விந்தணுக்கள் போன்றவை இருந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.
ஆனால், அங்கிருக்கும் நகர வழக்கறிஞர் அலுவலம், இதுவரை சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள், பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் கிடையாது, இதை உறுதிபடுத்த முடியாது என்று கூறியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும், அவர் இறப்புக்கான காரணம் பாலியல் துஷ்பிரயோகம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுவதால், குறித்த பெண்ணின் பெற்றோர் இரண்டாவது பிரேதபரிசோதனை செய்ய வேண்டும், எங்கள் மகள் அப்படி பட்டவள் கிடையாது, அவள் இறப்பதற்கு முன் போதை பொருள் கொடுக்கப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொன்றுள்ளதாக கதறுகின்றனர்.