பாகிஸ்தானில் ஹிந்துக்கள் தாக்குப்படுவதை தேவையாக நடவடிக்கைகள், எடுக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு, அந்நாட்டு ஹிந்து அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.
பிரித்தானியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர்.இதன்படி ஹிந்துக்கள் மன்றம் ஹிந்து ஷ்வயம் ஷேவக் சங்கம் பிரிட்டன் ஹிந்து கவுன்சில் விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட 10 அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டத்தில் கடந்த மாதம் ஒரு ஹிந்து கோவிலை விஷமிகள் இடித்துள்ளனர். இதற்கு முன் இஸ்லாமாபாதில் ஒரு கோவில் கட்டுவதற்கும் பலத்த எதிர்ப்பு இருந்தது.
அந்நாட்டில் சமீபகாலமாக ஹிந்துக்கள் மீதான இனப்படுகொலை துன்புறுத்தல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
கோவில் இடிப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதுடன் ஹிந்துக்கள் மீதான வன்முறைகளை தடுக்க அந்நாட்டு பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.