இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 569 பேரில் 37 பேர் கொழு ம்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதியிலிருந்து தற் போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற் றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20,017 ஆக அதிகரித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் 110 பேர், கம்பஹா மாவட்டத் தில் 88 பேர், கேகாலை மாவட்டத்தில் 52 பேர் , இரத்தின புரி மாவட்டத்தில் 33 பேர், வவுனியா மாவட்டத்தில் 32 பேர், கண்டி மாவட்டத்தில் 28 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 24 பேர், காலி மாவட்டத்தில் 18 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 15 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
புத்தளம் மாவட்டத்தில் 12 பேர், பொலன்னறுவை மாவ ட்டத்தில் 10 பேர் , மொனராகலை மாவட்டத்தில் 09 பேர் , நுவரெலியா மாவட்டத்தில் 09 பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 பேர் , யாழ்ப்பாண மாவட்டத்தில் 02 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 02 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.