தெற்கு அதிவேக வீதியில் 66.6 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது. காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெற்கு அதிவேக வீதி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.