அம்பாறை, பொத்துவில், முதலைப் பாறை பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடில் நிலவிய சீற்றற்ற் காலநிலையின்போது கடந்த 28ஆம் திகதி முதலை குறித்த நபரை இழுத்து சென்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த வாரம் எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டு ஆற்றை கடந்து சென்ற நபரை முதலை இழுத்துச் சென்றது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காணாமல்போனவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்த நிலையில், கடற்படையினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.