கொரோனா தொற்று காரணமாகத் தற்காலிகமாகத் தற் காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள் ளது.
இதன்படி பிரதான புகையிரத மார்க்கத்தின் 20 புகையிரத சேவைகளும், கரையோர புகையிரத மார்க்கத்தின் 12 புகையிரத சேவைகளும், வடக்கு மற்றும் களனிவெளி புகையிரத மார்க்கத்தின் ஊடாக 4 புகையிரத சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பமாகின்றன.
இதற்கமைய, கல்கிசை – காங்கேசன் துறை யாழ் தேவி கடுகதி புகையிரத சேவை காலை 5.55 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
காங்கேசன் துறை – கல்கிசை (யாழ் தேவி) கடுகதி புகையிரத சேவை காலை 9.00 மணிக்கு காங்கேசன் துறை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
கொழும்பு கோட்டை – காங்கேசன் துறை (உத்தரதேவி) நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவை மு.ப. 11.50 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தி லிருந்து ஆரம்பமாகும்.
காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை (உத்தரதேவி) நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவை காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
கொழும்பு கோட்டை – பதுளை (பொடி மெனிக்கே) கடுகதி புகையிரத சேவை காலை 5.55 மணிக்குக் கொழும்பு கோட் டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.