கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிப்பு
தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றுவரை(12) 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு பல கிராமங்களில் சில பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், கண்டாவளையில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேரும், பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 408 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்களின் தற்காலி மற்றும் நிரந்த வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளமையால் அவர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக ஊழியர்கள், இராணுவம் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.