மொனராகல மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் ஆர்.எம்.டி ஜெயசிங்க தெரிவித்தார்.
இன்று (12) நடத்தப்பட்ட விரைவான அன்டிஜன் பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மொனராகலவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் இந்த சிறுவனின் தாய்க்கும் கொரோனா தொற்று உள்ளமை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. சிறுவனும் அவனது தந்தையும் பின்னர் மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டைபொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பத்து பேர் நேற்று (11) மொனராகலவில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மொனராகலா சுகாதார மருத்துவ அதிகாரி திலினா வெல்லகே தெரிவித்தார்.


















