தனிமைப்படுத்தலில் இருந்த போது உயிரை மாய்த்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியானது.
பருத்தித்துறை புலோலி பகுதியில் வயோதிபப் பெண்ணொருவர் நேற்று காலை உயிரை மாய்த்திருந்தார்.
அவரது மகன் பதுளை மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த சில தினங்களின் முன்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது சகோதரன் மற்றும் சில நண்பர்கள் அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். பெற்றோர் தமது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களிற்கு நேற்று மாலை பிசிஆர் சோதனை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று தாயார் உயிரை மாய்த்தார்.
அவர் பிசிஆர் சோதனைக்கு அஞ்சி உயிரை மாய்த்தார், கொரோனாவிற்கு அஞ்சி உயிரை மாய்த்தார் என சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. எனினும், அவரது முடிவிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென்பதே உண்மை.
கொரோனா தொடர்பான மன அழுத்தங்களினால் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் அவரது பிசிஆர் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு தொற்று இல்லையென்பது தெரிய வந்துள்ளது.



















