நாட்டில் கொவிட்-19 காரணமாக மேலும் 4 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 255 ஐ கடந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த 90 வயதான பெண்ணொருவர் நேற்று மரணித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவுக்கு மாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் மரணித்துள்ளார்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா நோய் நிலைமை மற்றும் மூச்சுக்குழல் அலற்சி காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் நேற்று மரணமடைந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மரணித்துள்ளார்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா நோய் நிலை காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாலபிட்டி பகுதியை சேர்ந்த 78 வயதான ஆண் கடந்த 13ஆம் திகதி மரணித்துள்ளார். நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்றுறுதியானமையை அடுத்து இரணவில சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டமையை அடுத்து அவர் மரணித்துள்ளார்.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியாநோய் நிலைமையினால் அவர் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 75 வயதான ஆணொருவர் கடந்த 13ஆம் தமது வீட்டில் வைத்து மரணித்தார். கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா நோய் நிலை காரணமாக அவர் மரணமடைந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.