இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியுடன் மொத்தம் 695 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்று உறுதியானவர்களில் நாடு திரும்பிய எட்டு இலங்கையர்களும் நான்கு வெளிநாட்டவர்களும் அடங்குவதாக என கொரோனா தடுப்புக்கான தேசிய கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றும் மத்திய கிழக்கு, ஜேர்மனி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் பலர் நாடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறிவது இலங்கை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அதன் எல்லைகளைத் திறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரே அடையாளம் காணப்படுகின்றது.
இந்நிலையில் 2021 ஜனவரி 21 முதல் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய கொரோனா வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.