புதிய கொரோனா வைரஸ் வகைகளில் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக, நாட்டிற்குள் நுழையும் அனைத்து சர்வதேச போக்குவரத்து வழிகளையும் வரும் திங்கட்கிழமை முதல் பிரித்தானியா மூடுகிறது.
புதிதாக பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகைக் கொரோனா வைரஸ் பற்றிய விவரங்கள் அறியப்படும் வரை, வரும் திங்ககிட்கிழமை காலை 4 மணி முதல் பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்து வழிகளையும் குறைந்தது 1 மதத்திற்கு அடைக்கவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது,
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் அரசின் இந்த நடவடிக்கையை அறிவித்தார்.
மேலும், எதிர்மறையான கொரோனா வைரஸ் சோதனை முடிவைக் கொண்டிருப்பதே நாட்டிற்குள் செல்வதற்கான ஒரே வழி என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பிற நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவதற்கு, புறப்படுவதற்கு முந்தைய 72 மணி நேரத்திற்குள், கோவிட் சோதனை செய்யப்பட்டு எதிர்மறையான முடிவைப் பெற்ற ஆதாரம் கையில் இருக்கவேண்டும்.
மேலும், வருபவர்கள் பயணிகள் லொக்கேட்டர் படிவத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும், மேலும் விமான நிறுவனம் பயணிகள் புறப்படுவதற்கு முன்பு இந்த இரண்டு ஆதாரங்களையும் கேட்கும்.
விதிமுறைகளை மீறினால், கணிசமான அபராதங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதேபோல் பிரித்தானியாவுக்குள் நுழைந்த பிறகு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும், எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.
இந்த நடவடிக்கைகள்பிரித்தானியா மற்றும் ஐரிஷ் பிரஜைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும்.
இந்த அவசரகால நடவடிக்கைகள் பிப்ரவரி 15-ஆம் திகதி வரை பின்பற்றப்படும் என்று பிரித்தானிய போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த புதிய நடவடிக்கை பிப்ரவரி 15 அன்று மதிப்பாய்வு செய்யப்படும்.