இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கணவரின் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த 24 வயது ஆதிரா என்பவரே சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் மரணமடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பகல் சுமார் 11.45 மணியளவில் கழிவறையில் மரணமடைந்த நிலையிலேயே ஆதிரா மீட்கப்பட்டுள்ளார்.
45 நாட்களுக்கு முன்னரே ஆதிராவின் திருமணம் நடந்துள்ளது. இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
சம்பவத்தன்று பகல் சுமார் 8 மணியளவில் ஆதிராவின் கணவர் ஷரத் தமது தந்தையுடன் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
தொடர்ந்து சுமார் 10 மணியளவில் ஆதிராவின் தாயார் மகளை காண ஷரத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால் வீடு பூட்டியிருந்துள்ளதுடன், அவர் மகளை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் திரும்பியதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஷரத் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், மனைவி ஆதிராவை தேடியுள்ளார்.
இறுதியில் கழிவறை உள்ளே இருந்து பூட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தின் அடிப்படையில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஆதிரா மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் குழுவினரும் சம்பவப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு சில வாரங்கள் முன்னரே ஷரத் வெளிநாட்டில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.