சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் பங்கேற்ற 52 இளைஞர், யுவதிகள் ஹிகுராகொட பகுதியில் உள்ள ஹோட்டலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி இந்த விருந்தில் பங்கேற்ற 39 இளைஞர்களையும் 13 யுவதிகளையும் கைது செய்துள்ளதாக மதிரிகிரிய பொலிசார் தெரிவித்தனர்.
அவர்களில் 49 பேர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 3 பேர் கஞ்சா வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


















