யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 420 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் வட மாகாணத்தில் 8 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.



















