குஞ்சுக்குளம் பொலிஸ் சோதனைச்சாவடியில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரிலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த வாகனத்தை (லொரி) மறித்து சோதனை மேற்கொண்ட போது நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சியுடன் வாகனத்தில் பயணித்த 34, 52 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















