நாட்டில் நேற்று 770 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில் இருந்து 270 பேர் அடையாளம் காணப்பட்டனர். நாரஹேன்பிட்டியிலிருந்து 46 பேர், வெள்ளவத்தையிலிருந்து 23 பேர், மட்டக்குளியிலிருந்து 19 பேர், பொரளை மற்றும் வெல்லம்பிட்டியிலிருந்து தலா 18 பேர் தொற்றுடன் அடையாளம கண்டறியப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து 80 பேரும், மாத்தறை, காலியில் இருந்து தலா 56 பேரும், கண்டியில் இருந்து 54 பேரும், மாத்தளையிலிருந்து 40 பேரும், மன்னாரில் இருந்து 36 பேரும், களுத்துறையிலிருந்து 35 பேரும், வவுனியாவிலிருந்து 26 பேரும், பொலன்னறுவையிலிருந்து 22 பேரும், இரத்தினபுரியிருந்து 19 பேரும், குருநாகலில் இருந்து 15 பேரும், நுவரெலியா மற்றும் கேகாலையிலிருந்து தலா 9 பேரும், அனுராதபுரத்திலிருந்து 6 பேரும், அம்பாறை மற்றும் மொனராகலலையிலிருந்து தலா 5 பேரும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையில் இருந்து தலா 4 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று 770 தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டதன் மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 55,189 ஆக உயர்ந்துள்ளது.