மன்னார் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதியானது. அநுராதபுரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியானது.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 100 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




















