வவுனியாவில் கொரனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று விடுவிக்கப்பட்டது.
வவுனியா பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.
அத்தோடு வவுனியா நகரப் பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த நிலையில் பிரதான நகரம் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், வவுனியா மொத்த வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளது.
அத்தோடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவு வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.