“தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பிளவுப்படுத்த ஆளுகின்ற இந்த அரசு விலை பேசி, வலை வீசுகின்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பிளவுப்படுத்தும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். தமிழ் பேசும் இலங்கை சமூகமும் மன்னிக்காது என நம்புகிறேன்.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
என் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து நண்பர்களும் எம்மோடு கரம் கோர்க்க வேண்டுகின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.