கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பின்னரும் மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந் ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான வெகுஜன தடுப்பூசி தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த விளைவை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள், சுகாதார மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்.
தடுப்பூசி செலுத்துவது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைக் குறைக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த பண்டிகை காலங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு சட்டரீதியான தடைகள் மேற்கொள்ளப்படவில்லை.இதன் காரணமாகவே கொரோனா தற்போது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டை மீறவில்லை என்று அவர் கூறினார். தினசரி அடிப்படையில் பதிவாகும் தொற்றுக்களின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்