ஹட்டன் பகுதியிலுள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கடந்த 21 ஆம் திகதி தொற்றுறுதியானது.
இந்த நிலையில் அவருடன் தொடர்புடைய மேலும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் இரண்டு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
வட்டவளை, ரொசல்ல, குடாகம, ருவான்புர, ஹட்டன் தோட்டம் மற்றும் ஹெரோல் தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பகமுவ பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.